Friday, March 7, 2008

வாழைப்பூ கூட்டு



தேவையானப் பொருட்கள்

வாழைப்பூ பொடியாக நறுக்கியது-- 2 கப்
பயத்தம் பருப்பு-- 1/2 கப்
வெங்காயம்-- 1
பச்சைமிளகாய்-- 3
மஞ்சள் தூள்-- 1/4 டீஸ்பூன்
தேங்காய்துருவல்-- 4 டீஸ்பூன்
சீரகம்-- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை-- சிறிது
உப்பு-- தேவையான அளவு
எண்ணெய்-- தாளிக்க

செய்முறை
♦பயத்தம் பருப்பை குழையாமல் வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
♦எண்ணெய்யை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து வதக்க வேண்டும்.
♦பிறகு அதில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ,மஞ்சள் பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
♦வாழைப்பூ வெந்ததும் வேகவைத்த பருப்பு சேர்க்க வேண்டும்.
♦கடைசியில் தேங்காய் துருவலையும் சீரகத்தையும் அரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் சுவையான வாழைப்பூ கூட்டு தயார்.

குறிப்பு;-
வாழைப்பூவை நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்தால் வாழைப்பூ சீக்கிரம் கருக்காது.

Sunday, March 2, 2008

வெங்காய பக்கோடா



தேவையானப் பொருட்கள்


கடலை மாவு-- 1 கப்
அரிசி மாவு-- 1/4 கப்
பெரிய வெங்காயம்-- 1
இஞ்சி-- 1துண்டு
பச்சை மிளகாய்-- 2
பூண்டு-- 4 பல்
கறிவேப்பிலை-- சிறிது
மல்லித்தழை-- சிறிது
உப்பு-- சுவைக்கேற்ப
எண்ணெய்-- தேவையான அளவு

செய்முறை
♦ வெங்காயத்தை தோல்நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள்.
♦ இஞ்சி,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள் பூண்டை நசுக்கி கொள்ளவும்.
♦ எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக பிசறிக் கொள்ளுங்கள்.
♦ எண்ணெயைக் காயவைத்து,ஒற்றை ஒற்றையாக உதிர்த்து விடுங்கள்.
♦ பொன்னிறத்தில் வேகவிட்டெடுத்து பரிமாறுங்கள்.