Monday, April 7, 2008

தக்காளி சட்னி



தேவையானப் பொருட்கள்


தக்காளி (பெரியது) - 3 (நறுக்கிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் (பெரியது)- 1(நறுக்கிக் கொள்ளவும்
மிளகாய் வற்றல் - 6
உப்பு - தேவையான அளவு
கடுகு,உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, சமையல் எண்ணெய் - தாளிக்க

செய்முறை

♦ முதலில் மிளகாய் வற்றலை 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
♦ அதை எடுத்துவிட்டு 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.கொஞ்சம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
ஆறியதும் மிளகாய் வற்றல்,உப்பு,வதக்கிய வெங்காயம்,தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
♦ கடுகு,உ.பருப்பு,கறிவேப்பிலையை தாளித்து போட்டு பரிமாறவும்.

தேங்காய் சட்னி




தேவையானப் பொருட்கள்


தேங்காய்த் துருவல் - 3/4 கப்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
ப.மி (அ) மிளகாய் வற்றல் - 4
உப்பு - தேவையான அளவு
கடுகு,உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, சமையல் எண்ணெய் - தாளிக்க

செய்முறை

♦ மிக்ஸியில் பச்சைமிளகாய் (அ) மிளகாய் வற்றல்,உப்பு,பொட்டுக்கடலை,தேங்காய்த்தூருவலைப் போட்டு அரைக்கவும்.
♦ கடுகு,உ.பருப்பு,கறிவேப்பிலையை தாளித்து போட்டு பரிமாறவும்.இதில் 4 சின்ன வெங்காயத்தையும் தோல் உரித்து, நறுக்கி வதக்கிப் போடலாம்.