Thursday, February 28, 2008

பயத்தம்பருப்புப் பாயசம்

தேவையானப் பொருட்கள்
பயத்தம் பருப்பு - ஒரு கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
பெரிய தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் - 5
முந்திரிப்பருப்பு - 75 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை
♦ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பயத்தம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
♦ தேங்காயைத் துருவி இரண்டு முறை பால் எடுத்து தனித்தனியாக வைக்கவும்.
♦ வெல்லத்தைப் பொடியாக நுணுக்கிக் கொள்ளவும்.
♦ பெரிய வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்துக் கொண்டு சீவி வைத்த வெல்லம், வேக வைத்த பருப்பு சேர்த்து தீயை மிதமாக வைத்து அதில் இரண்டாவதாக எடுத்த பாலை ஊற்றவும்.
♦ வெல்லம் கரைந்தவுடன் ஏலப் பொடி, மற்றும் முதலில் எடுத்த பால் சேர்த்து கிளறி இறக்கவும்

கத்திரிக்காய் புளிக் குழம்பு



தேவையானப் பொருட்கள்


♦ கத்திரிக்காய் - 5
♦ பெரிய வெங்காயம் - 1
♦ பூண்டு - 10 பற்கள்
♦ கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
♦ புளி - சிறிய எலுமிச்சை அளவு
♦ தேங்காய் - 5 பத்தை
♦ உப்பு - தேவையான அளவு
♦ நல்லெண்ணை - தாளிக்க
♦ சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
♦ பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை

♦ புளியை வெது வெதுப்பான நீரில் ஊற வைக்கவும். தேங்காய் பத்தைகளை மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
♦ வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கத்திரிக்காய்களின் காம்பினை நீக்கி விட்டு, பின்புறத்தை நான்காக கீறவும். (முழுவதுமாக காயை நறுக்காமல், முக்கால் பாகத்திற்கு காய்களைக் கீறிக்கொள்ளவும்)
♦ எண்ணெய் சட்டியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
♦ சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு, உளுந்து தாளித்ததும், சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
♦ பிறகு பூண்டை வதக்கவும், கீறி வைத்துள்ள கத்திரிக்காய்களை சேர்த்து வதக்கவும். காயை வதக்கும் போது தீயை சிறிதாக வைத்து, சிறிது நீர் விட்டு வதக்கவும்.
♦ காய் பாதி வெந்த நிலையில், புளியை கரைத்து அதில் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து சட்டியில் ஊற்றவும்.
♦ குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மிக்சியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
♦ பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான புளி குழம்பு 30 நிமிடங்களில் தயார்.

Thursday, February 7, 2008

பாதுஷா


தேவையான பொருட்கள்
மைதா மாவு -- 2கப்
வெண்ணெய் -- 1/2 கப்
பேக்கிங் பவுடர் -- 1/2.டீஸ்பூன்
சர்க்கரை -- 2 கப்
தயிர் -- 1 டீஸ்பூன்
சமையல்.எண்ணெய் -- 2 கப்

செய்முறை

♦ மைதா மாவுடன் பேக்கிங் பவுடர்,தயிர்,வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
♦ இத்துடன் சிறிது சிறிதாய் தண்ணிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
♦ ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பிறகு அதனை வடைப் போல் தட்டி எண்ணெய்யில் போட்டு பாதுஷக்களை பொன்னிறமாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
♦ சக்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சி கொள்ளவும்.
♦ பாதுஷக்களை இப்பொழுது சர்க்கரைப் பாகில் போடவும். அதன் மீது சர்க்கரைப் பாகினைப் பரவலாக ஊற்றி ஆற விடவும்.
♦ இப்பொழுது சுவையான பாதுஷா ரெடி.